அஜித்தின் ரேசிங் பந்தய பயணத்தின் ஆவணப்படமான 'கிளாடியேட்டர்ஸ்' டிரெய்லர் இணையத்தில் வெளியீடு; ரசிகர்கள் உற்சாகம்..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரங்களில் ஒரு அஜித்குமார். இவர் தற்போது சினிமாவையும் தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் தீவிர ஆர்வம் கொண்டுள்ளார். சர்வதேச அளவிலான கார் பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறார். 

அவரது இந்த சவால்கள் நிறைந்த ரேசிங் பயணத்தையும், பந்தயக் களத்தில் அவர் எதிர்கொண்ட அனுபவங்களையும் பதிவு செய்யும் வகையில் 'கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது. 

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்குமார், தனது கோல்டன் டிராபி ஃபிலிம் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த ஆவண படத்தில், எடிட்டராக ஆண்டனி பணியாற்றியுள்ளார்.

இந்தப் படத்தின் டிரெய்லர் கடந்த ஏப்ரல் 06-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இதையடுத்து, 02 வாரங்களுக்கு பிறகு படக்குழுவினர் டிரெய்லரை தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கின்றனர். 03 நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த டிரெய்லருக்கு மத்திய தணிக்கைக்குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 

இந்த டிரெய்லரில், அஜித், அவரது மனைவி ஷாலினி, மகன் அனோஷ்கா, மகன் ஆத்விக் மற்றும் அஜித்தின் மேலாளர் உள்ளிட்ட பலரும் அஜித்தின் ரேசிங் வாழ்க்கை குறித்தான பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ajiths Gladiators trailer released online


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->