ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பதற்றம்; 1,000 ட்ரோன்களை ஏவி அதிரடி தாக்குதல் நடத்தியுள்ள உக்ரைன் ..! - Seithipunal
Seithipunal


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது.  இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைனியப் படைகள் ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதலை நடத்தியுள்ளன

இது ரஷ்ய வரலாற்றிலேயே அதனை தலைநகர் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இது குறித்து மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரி வொரோபியோவ் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

இந்தத் தாக்குதலில் 74 வயது முதியவர் மற்றும் 44 வயது பெண் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள கோடெல்னிகி பகுதியில் உள்ள பல அடுக்கு குடியிருப்பு கட்டிடம் ஒன்று ட்ரோன் தாக்குதலால் பலத்த சேதமடைந்துள்ளதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது குறித்து, மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவிதுள்ளதாவது; நகரின் முக்கிய எரிபொருள் விநியோக ஆதாரமாக இருக்கும் மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குடியிருப்பு வளாகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பம் மற்றும் கருங்கடல் பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 1,100 உக்ரைனிய ட்ரோன்களை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகவும், தலைநகர் மாஸ்கோவை நோக்கி வந்த 450 ட்ரோன்கள் வழியிலேயே அழிக்கப்பட்டதாக மாஸ்கோ மேயர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரஷ்யாவில் போர்க் கால சூழலுக்கு மத்தியில் முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தல் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், அதன் கடைசி நாளில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகள் மற்றும் கிரிமியாவிலும் இந்தத் தேர்தலை ரஷ்யா நடத்தியது. இந்தத் தேர்தலை முடக்குவதற்காகவே உக்ரைன் இத்தகைய முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தியதாகவும், ஆனால் எதிரிகளின் அந்த முயற்சி தோற்றுவிட்டதாகவும் மாஸ்கோ மேயர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Flamingo மற்றும் Pelican உள்ளிட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு நிதியளிக்கும் எண்ணெய் மற்றும் விநியோக மையங்களை இலக்கு வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ukraine has launched an attack on the Russian capital Moscow using 1000 drones


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->