நடிகர் பிரபுவின் சகோதரி சாந்தி காலமானார்...! - சோகத்தில் சிவாஜி கணேசன் குடும்பம் - Seithipunal
Seithipunal


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவு சிவாஜி கணேசன் குடும்பத்தினர் மட்டுமின்றி, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் திரையுலகில் தனக்கென தனி வரலாற்றை உருவாக்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

தனது அபார நடிப்பாலும், கம்பீரமான வசன உச்சரிப்பாலும், ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்துவமாக வெளிப்படுத்தியதாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.சிவாஜி கணேசன் - கமலா தம்பதிக்கு ராம்குமார், பிரபு என இரு மகன்களும், சாந்தி, தேன்மொழி என இரு மகள்களும் உள்ளனர்.

இவர்களில் மூத்த மகளாக சாந்தி இருந்தார். சாந்திக்கு சத்தியலட்சுமி என்ற மகள் உள்ளார்.சாந்தி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சையில் இருந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாந்தியின் மறைவுச் செய்தி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவால் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.சாந்தியின் மறைவு செய்தி அறிந்த திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், ரசிகர்களும் சாந்தியின் மறைவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த இழப்பு, அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Prabhu sister Shanthi passes away Sivaji Ganesan family in mourning


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->