தந்தை கொலைக்கு 25 ஆண்டுகள் காத்திருந்து பழிவாங்கிய மகன்...! மதுரையில் ரவுடி வெட்டிக் கொலை...! - Seithipunal
Seithipunal


தந்தையை கொடூரமாக கொலை செய்தவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் 25 ஆண்டுகளாக காத்திருந்த மகன், தற்போது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாநகர் சோலைஅழகுபுரம் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சப்பாணி சரவணன் (50). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சில வழக்குகளில் சிறை சென்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை சரவணன் அப்பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை நோக்கி விரைந்து வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.ஆனால், அவரை விடாமல் பின்தொடர்ந்த கும்பல், சிறிது தூரம் துரத்திச் சென்று சரவணனை சுற்றிவளைத்தது. பின்னர் அவரை சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சரவணன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெய்ஹிந்த்புரம் காவலர்கள், உடனடியாக அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சரவணனின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களின் அடிப்படையிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.இந்த கொலை தொடர்பாக 10 பேரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, இந்த கொலைக்குப் பின்னால் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மற்றொரு கொலை சம்பவம் இருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.காவலர்களின் விசாரணையில், கடந்த 2001-ம் ஆண்டு மேலராஜ வீதியைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சப்பாணி சரவணன் முக்கிய குற்றவாளியாக இருந்ததாக தெரியவந்துள்ளது.

தந்தை புஷ்பராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மறக்காமல் இருந்த அவரது மகன் பாலமுருகன், சரவணனை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பல ஆண்டுகளாக காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கால் நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சரவணனை கொலை செய்து, தந்தையின் மரணத்திற்கு பழிதீர்த்ததாக காவலர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது.25 ஆண்டுகளாக மனதில் கனன்று கொண்டிருந்த பழிவாங்கும் எண்ணம் கொலையில் முடிந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Son waits 25 years father murder avenge him Rowdy hacks him death Madurai


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->