குழந்தை தொழிலாளி, கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக திருவள்ளூர் மாற்றப்படும்; மாவட்ட ஆட்சியர் உறுதி..! - Seithipunal
Seithipunal


''திருவள்ளூர் மாவட்டத்தை குழந்தை தொழிலாளர், கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான அனைத்து தொழில் நிறுவனங்கள் பணியமர்த்தாத சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற விவரங்களை பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்கலாம்.'' என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச.கவிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் ச.கவிதா வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் அபராதம் ரூ.50 ஆயிரம் வரை விதிக்கப்படும். குறைந்தபட்சம் சிறை தண்டனையாக 3 மாதமும் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்படும். அபராதம் மற்றும் சிறை தண்டனை இரண்டும் விதிக்கப்படும் என்றும் நிறுவன உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வின் மூலம் கடந்த 2 மாதங்களில் கொத்தடிமை தொழிலாளர்கள், குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்துவது தவிர்க்கப்பட்டு வருகிறது.

16.9.2026 அன்று பொன்னேரி பகுதியில் உள்ள செங்கல்சூளையில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டு அங்கு குழந்தை, கொத்தடிமை தொழிலாளர்கள் எவரும் பணிபுரியவில்லை என்று கண்டறியப்பட்டது. 

அங்கு 9 தொழிலாளர்கள் தொடர்ந்து பணிபுரிய விருப்பமில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியரால் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லை என்று அடையாளம் கண்டறியப்பட்டு பொன்னேரி தொழிலாளர் உதவி ஆணையரால் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி தொகை கணக்கீடு செய்யப்பட்டு 9 பேருக்கும் ரூ.1லட்சத்து 33 ஆயிரத்து 136 ஐ வருவாய் கோட்டாட்சியரால் உடனடியாக உரிய நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு வழங்கப்பட்டு 9 தொழிலாளர்களளையும் தங்கள் சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு அனுப்பி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தை குழந்தை தொழிலாளர், கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான அனைத்து தொழில் நிறுவனங்கள் பணியமர்த்தாத சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற விவரங்களை பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்கலாம்.''என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The District Collector has pledged to transform Tiruvallur into a district free of child labor and bonded labor


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->