புனே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு; திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், காதலன் உள்ளிட்ட மூவர் மீது 5,053 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேதன் அகர்வால் வழக்கில் 5,053 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். 

பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேதன் அகர்வால் என்பவருக்கும், சியா கோயல் என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஜூன் 18-ஆம் தேதி லோஹாகாட் கோட்டைக்கு சென்ற கேதன் அகர்வால், கீழே தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து புனே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சியா கோயல் தனது காதலன் சேத்தன் சவுத்ரி மற்றும் ரித்தேஷ் ஹங்கே ஆகியோருடன் இணைந்து திட்டமிட்டு கேதன் அகர்வாலை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்த கொலை சதிக்திட்டத்தில் தொடர்புடைய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது  இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்துள்ளன. இந்நிலையில், வாட்காவ் மாவல் நீதிமன்றத்தில் 5,053 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். அதில் செல்போன் உரையாடல்கள், புகைப்படங்கள், செல்போன் தரவுகள், அழைப்பு விவரப் பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் உள்ளிட்ட அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், கேதன் அகர்வாலை தீர்த்துக்கட்ட சியா கோயல் இணையதளத்தில் பல்வேறு கொலைகள் பற்றி தீவிரமாக ஆராய்ந்ததும் அம்பலமாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே லோஹாகாட் மலையிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் குறித்தும், மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கடந்த ஆண்டு மே 23-ஆம் தேதி மாயமாகியா நிலையில், ஜூன் 02-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்ட இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவரை அவரது மனைவி சோனம் கொலை செய்த கொடூர சம்பவம் குறித்தும் யூடியூப் போன்ற இணையத்தில் தேடிப் படித்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

இந்த கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர அனைத்து பலமான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5053 page charge sheet filed against three individuals including a woman whose marriage was fixed and her lover in the Pune real estate tycoon murder case


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->