இந்தியா-ஏ அணியின் தலைமை பயிற்சியாளராக லட்சுமிபதி பாலாஜி நியமனம்..! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான லட்சுமிபதி பாலாஜி, ஆஸ்திரேலியா-ஏ அணிக்கு எதிரான வரவிருக்கும் தொடருக்கான 'இந்தியா-ஏ' அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இந்த தொடர் தொடங்கவுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்தியா-ஏ மற்றும் ஆஸ்திரேலியா-ஏ அணிகளுக்கு இடையே 02 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளும், 03 ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன. 

இத தொடரின் டெஸ்ட் அணிக்கு இளம் வீரர் தேவ்தத் படிக்கல் கேப்டனாவும், ஒருநாள் அணிக்கு நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகவும் தலைமை தாங்குகின்றனர்.

இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள லட்சுமிபதி பாலாஜி, தனது சிறந்த பந்துவீச்சின் மூலம் பல வெற்றிகளைத் அணிக்காக தேடித்தந்தவர். அத்துடன், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதுடன், அதன் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், தமிழ்நாடு ரஞ்சித் கோப்பை அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இவருக்கு இருக்கும் பயிற்சியாளர் அனுபவமே இந்த முக்கியப் பொறுப்புக்கு இவரைத் தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாகும்.

ஆஸ்திரேலியா-ஏ அணிக்கு எதிரான இந்த முக்கியமான மல்டி-ஃபார்மட் தொடரில் பாலாஜியின் வழிகாட்டுதல் இளம் வீரர்களுக்குப் பெரிதும் கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் தொடருக்குப் பிறகு அவர் தொடர்ந்து இந்தியா-ஏ அணியின் பயிற்சியாளராகத் தொடர்வாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lakshmipathy Balaji appointed as Head Coach of the India A team


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->