ஸ்ரீவைகுண்டம் அருகே பயங்கரம்; கல்குவாரியில் பணம் கேட்டு அரிவாளால் தாக்க முயன்ற தவெக நிர்வாகி..! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கல்குவாரிக்குச் சென்று பணம் கேட்டு தவெக நிர்வாகி அரிவாளால் தாக்க முயற்சிப்பதோடு, கொலை மிரட்டல் விடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாதன்மங்கலம் பகுதியில் ஒரு கல்குவாரி இயங்கி வருகிறது. இந்தக் கல்குவாரியை செல்வம் என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஸ்ரீவைகுண்டம் மேற்கு தவெக ஒன்றிய செயலாளர் பாலமுருகன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர், செல்வத்திடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

ஆனால், செல்வம் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இந்நிலையில், கல்குவாரி அறையில் இருந்த கம்ப்யூட்டர், டி.வி., பைக் ஆகியவற்றை பாலமுருகன் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் சேர்ந்து சேதப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், தொடர்ந்து பணம் கொடுக்க மறுத்த செல்வத்தை, தவெக நிர்வாகி பாலமுருகனும், அவரது சகோதரரும் சேர்ந்து அரிவாள் கொண்டு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது தொடர்பாக செல்வம் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.  இதையடுத்து பாலமுருகன் மற்றும் அவரது சகோதரர் மீது காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பாலமுருகனை மட்டும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தவெக நிர்வாகி பாலமுருகன், கல்குவாரியில் செல்வத்தை பணம் கேட்டு அரிவாள் கொண்டு கொலை மிரட்டல் விடுத்த சி.சி.டி.வி. காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tvk administrator tried to attack with a sickle while demanding money at a quarry near Srivaikundam


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->