ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா அணி; தொடரின் ஆட்டநாயகன் ஆனார் 'இளம்புயல்' வைபவ் சூர்யவன்ஷி..!
India whitewashes Zimbabwe in T20 series
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 03 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணிகைப்பற்றி அவ்வணியை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்துள்ளது.
ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்ற 03-வது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி முதலில் களமிறங்கியது. அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி 49 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அதிரடி காட்டியதில், இந்திய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 05 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது.
அடுத்து, 193 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். அணியின் சார்பாக ரியான் பர்ல் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்களில் 07 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இன்று வெற்றிப்பெற்றதன் மூலம் தொரடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இதற்கு முன்பு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர்களில் சந்தித்த தோல்விகளுக்குப் பின், இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்து வெற்றியின் மூலம் மீண்டும் டி20 தரவரிசையில் தனது முதலிடத்தை வலுப்படுத்தியுள்ளது.
அதன்படி, இன்றைய போட்டியில் சூரியவன்ஷி ஆட்டநாயகனாகவும், தொடரை ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
English Summary
India whitewashes Zimbabwe in T20 series