சத்தியபாமாவை உருவ கேலி செய்த ஸ்டாலின்; ''This is DMK's DNA''; அமைச்சர் அருண்ராஜ் கண்டனம்..!
Minister Arunraj condemns Stalin for body shaming Sathyabhama
தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சுகன்யாவை ஆதரித்து இன்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், ''இந்தத் தொகுதி தவெக வேட்பாளரை பெட்டி பாமா, பல்டி பாமா என சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை மக்கள் அழைக்கின்றனர்.'' விமர்சித்து பேசினார்.
அத்துடன், தவெக வேட்பாளர் சத்யபாமாவின் உருவம் குறித்தும் உருவக்கேலி செய்யும் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், பதிவிட்டுள்ளதாவது;
''தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின், நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்தியபாமாவைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார்.
அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். This is DMK's DNA. தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Arunraj condemns Stalin for body shaming Sathyabhama