பிக்பாஸ் வீட்டில் நடந்த பணப்பெட்டி போட்டி! பணப்பெட்டியோடு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?
The cash box task took place in the Bigg Boss house Do you know which contestant left the Bigg Boss house with the cash box
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் குமரன் திடீரென வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எதற்காக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் என்பதற்கான காரணம் குறித்த தகவல்களும் தற்போது வெளியாகி வருகின்றன.
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் தமிழ் உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இதுவரை 9 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது 10-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், அவர் விலகிய பிறகு 8-வது சீசன் முதல் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
100 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுகின்றனர். வாரந்தோறும் நடைபெறும் டாஸ்க்குகள், நாமினேஷன் மற்றும் எவிக்ஷன் என அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தொலைக்காட்சியில் தினமும் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ், ஓடிடி தளத்திலும் நேரலை மூலம் ரசிகர்களை சென்றடைகிறது.
அந்த வகையில் சீசன் 10 தொடங்கியதில் இருந்தே போட்டியாளர்களின் நடவடிக்கைகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன. இந்த சீசன் தொடங்கி 23 நாட்கள் நிறைவடைந்து 24-வது நாளை எட்டியுள்ள நிலையில், மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் இரண்டு வைல்ட்கார்டு போட்டியாளர்களும் ஏற்கனவே வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், தற்போது 18 பேர் பிக்பாஸ் வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த வார எவிக்ஷன் தொடர்பாகவும் வித்தியாசமான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஏற்கனவே லீடர் எக்ஸிட் போல் மூலம் வெளியேறிய லட்சுமி பிரியா, ஜாவித் மற்றும் சாவின்யா ஆகிய மூவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். அவர்கள் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் தலா ஒருவரை தேர்வு செய்தனர். அதன்படி ஜாவித், தன்யாவையும், சாவின்யா, அஸ்மிதாவையும், லட்சுமி பிரியா, குமரனையும் தேர்வு செய்தனர். இதனால் தன்யா, அஸ்மிதா, குமரன் உள்ளிட்ட 6 பேர் இந்த வார நாமினேஷனில் சிக்கியுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள், தங்களை தேர்வு செய்தவர்களுடன் கையில் கயிறு கட்டிக்கொண்டு ஜோடியாக இருக்க வேண்டும் என்றும், அந்த கயிற்றை கழற்றினால் அவர்கள் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்றும் விதிமுறை வகுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், லட்சுமி பிரியாவுடன் கயிறு கட்டிக்கொண்டு இருந்த குமரன், திடீரென அந்த கயிற்றை கழற்றிவிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் இருந்த ரூ.5 லட்சம் தொகையை எடுத்துக்கொண்டு குமரன் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
எனினும், குமரன் உண்மையிலேயே ரூ.5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை, இதை உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே பார்க்க வேண்டியுள்ளது. குமரனின் இந்த திடீர் முடிவு உண்மையா என்பது நிகழ்ச்சியின் அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும்.
English Summary
The cash box task took place in the Bigg Boss house Do you know which contestant left the Bigg Boss house with the cash box