அட்டகத்தி தினேஷின் காதல் குறித்து வெளியாகி வந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி..பிறந்தநாள் பதிவால் வெளியான ரகசியம்!
Putting an end to the rumors about Attakathi Dinesh love life a secret revealed through a birthday post
அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, விசாரணை, குக்கூ, கபாலி, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் அட்டகத்தி தினேஷ். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் மற்றும் பந்தாக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
42 வயதாகும் தினேஷ் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வந்த நிலையில், அவரது காதல் மற்றும் திருமணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி எழிலரசியும் தினேஷும் நீண்ட காலமாக காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன.
இந்த நிலையில், எழிலரசியின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ள எழிலரசி, தனது பதிவில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், தனது அன்புக்குரியவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ள எழிலரசி, வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் மற்றும் சிறந்த பயணங்கள் என எது வந்தாலும் ஒவ்வொரு முறையும் அவரையே தேர்வு செய்வேன் என்ற பொருளில் காதல் நிறைந்த வரிகளை பதிவிட்டுள்ளார்.
எழிலரசியின் இந்த வெளிப்படையான பிறந்தநாள் பதிவு, தினேஷுடனான அவரது உறவு குறித்து இதுவரை வெளியான தகவல்களுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் இருவரும் காதலித்து வருவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
எழிலரசி சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதுடன், பிரபலங்களையும் தொடர்ந்து பேட்டி எடுத்து வருகிறார். தற்போது அவரது பிறந்தநாள் வாழ்த்து பதிவு வைரலாகி வரும் நிலையில், தினேஷ் மற்றும் எழிலரசியின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
English Summary
Putting an end to the rumors about Attakathi Dinesh love life a secret revealed through a birthday post