'எனர்ஜி டிரிங்'க் லேபில் தடை விவகாரம்; 'ரெட் புல்' நிறுவனம் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!
Significant order by the Delhi High Court in the case filed by Red Bull regarding the energy drink label ban
பாட்டில்களில் 'எனர்ஜி டிரிங்க்' எனக் குறிப்பிடுவது நுகர்வோருக்கு உடலுக்கு உடனடி ஆற்றலையோ அல்லது சிறப்புச் சுகாதார நன்மைகளையோ அளிப்பது போன்ற தவறான எண்ணத்தை உருவாக்கும் எனக் கூறி, 'ரெட் புல்', 'பெப்சிகோ', 'மான்ஸ்டர்', 'ஹெல் எனர்ஜி' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அந்த சொற்களை மாற்ற 90 நாட்கள் அவகாசம் வழங்கி கடந்த ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பப் பட்டது.
இதனை எதிர்த்து 'ரெட் புல்' நிறுவனம் தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையின் படி, "மனுதாரர் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல், விதிகளுக்கு மாறாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தது.
அத்துடன், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தனது நிலைப்பாட்டை விளக்க நிறுவனத்திற்கு எந்தவொரு வாய்ப்பையும் வழங்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை எனக் குறிப்பிட்டுள்ள நீதிமன்றம் அந்த தடையை ரத்து செய்துள்ளது.
அத்தோடு, 'ரெட் புல்' நிறுவனத்திற்கு உரிய விளக்கம் கோரும் நோட்டீஸ் வழங்கி, அவர்களின் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த பிறகே உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இது தொடர்பாகப் புதிய உத்தரவைப் பிறப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மேலேயும், இந்த மனு மீதான வழக்கில் 'ரெட் புல்' நிறுவனம் தனது வாதத்தில் கூறியுள்ளதாவது;
இந்தியாவில் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 'எனர்ஜி டிரிங்க்' என்ற சொல்லைப் பயன்படுத்தி வருவதாகவும், கஃபின் கலந்த பானங்களுக்கான பிரிவில் இந்தச் சொல்லைப் பயன்படுத்த முன்னதாகவே அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Significant order by the Delhi High Court in the case filed by Red Bull regarding the energy drink label ban