தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடும் இணையவாசிகள்; 'கிசுகிசுக்களுக்கு வாதாடி பதிலளிக்க உடம்பில் தெம்பு இல்லை'; பிரபல ஹாலிவுட் நடிகை வேதனை..!
Famous Hollywood actress Dakota Johnson says she doesnt have the energy to argue and respond to gossip
உலகளவில் வசூலை வாரிக்குவித்த 'பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே' திரைப்பட வரிசையின் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் ஹாலிவுட் முன்னணி நடிகையான டகோட்டா ஜான்சன் (35).
ஏற்கனவே இவர் பிரபல இசைக்கலைஞர் கிறிஸ் மார்ட்டினை காதலித்து பிரிந்த நிலையில், சமீபத்தில் டக்கர் பில்ஸ்பரியை பிரிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து மெஷின் கன் கெல்லியுடன் தொடர்பில் இருப்பதாகவும் இணையதளங்களில் கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்த விவகாரம் மற்றும் தொடர்ந்து வரும் கிசுகிசுக்கள் குறித்து டகோட்டா ஜான்சன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதாவது, ''எனது மேலாளர் அல்லது வழக்கறிஞருடன் இரவு உணவிற்குச் சென்றால் கூட, 'மர்ம நபருடன் நடிகை' என உண்மைக்கு புறம்பாக எழுதுகிறார்கள். மக்கள் எதை நம்ப வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைத்தான் நம்புவார்கள். அதற்காக ஒவ்வொரு முறையும் வாதாடி போராடுவதற்கு எனது உடம்பில் தெம்பு இல்லை என்பதால், எனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்த முடிவு செய்துவிட்டேன். மேலும் சமூக வலைதளங்களை விட்டு முழுமையாக விலகிவிட்டேன். தேவையற்ற வீண் வதந்திகளைப் புறந்தள்ளிவிட்டு எனது நடிப்புப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவேன்''. என்று சமூகத்தில் அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் இணையவாசிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
Famous Hollywood actress Dakota Johnson says she doesnt have the energy to argue and respond to gossip