தனது பெயரில் போலி கணக்கு; எக்ஸ் தளத்தில் ரசிகர்களை எச்சரித்த நடிகர் துல்கர் சல்மான்..! - Seithipunal
Seithipunal


நடிகர் துல்கர் சல்மான், ஒரு போலி சமூக வலைதள கணக்கு குறித்து தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட துல்கர் சல்மான், "@_dulQuer என்பது எனது உண்மையான கணக்கு என்று நம்புவதை நிறுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு "போலிப் பிரதிபலிப்புக் கணக்கு" என்று தன்னைத்தானே அடையாளப்படுத்திக்கொண்டுள்ளது.

நான் பேசுவது போலவே பாவனை செய்து, திரைப்படங்கள், சக நடிகர்கள் மற்றும் எனது குடும்பத்தினர் குறித்த விஷயங்களில் கூட போலியான கருத்துகளையும் வாழ்த்துகளையும் பதிவிடுவதை அது வேடிக்கையாக கருதுகிறது.

இது தேவையற்ற குழப்பத்தையும் எதிர்மறையான சூழலையும் உருவாக்குகிறது. நான் ஏற்கனவே இந்தக் கணக்கு குறித்து புகார் அளித்துள்ளேன். ஆனால் இன்னும் அதற்கான பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு துல்கர் சல்மானின் ரசிகர்களிடம் இருந்து பல கருத்துகள் வந்தன. அவர்களில் சிலர் தாங்களும் அந்த கணக்கை புகார் செய்திருப்பதாக கூறியுள்ளனர். "நான் இதைப்பற்றி நான்கு முறை புகார் அளித்தேன், ஆனால் எக்ஸ் எந்த நடவடிக்கையும் எடுப்பதே இல்லை," என்று ஒரு பயனர் குறிப்பிட்டு இருந்தார்.

இன்னும் பலரும் இந்த பதிவுக்கு பல தரப்பிலும் இருந்தும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Dulquer Salmaan warned fans on X about a fake account using his name


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->