உலக சுற்றுலா தினம்: தனுஷ்கோடியில் 500 குழந்தைகள் ராமர் சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் வேடமிட்டு நாட்டியாஞ்சலி..! - Seithipunal
Seithipunal


உலக சுற்றுலா தினத்தையொட்டி ராம் யாத்திரை என்ற தலைப்பில் ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சிநேயர் வேடமடைந்து தனுஷ்கோடி அரிச்சல் முனையில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரே நேரத்தில் நாடனமாடி அசத்தியுள்ளனர்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை, அபிநய நாட்டியாஞ்சலி அறக்கட்டளை இணைந்து உலக சுற்றுலா தினமானத்தையொட்டி இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடமான தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் உள்ள அசோகச் சக்கரத்தூண் அருகே சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் காவி உடை அணிந்து ராமர், சீதை ,லட்சுமணர், ஆஞ்சநேயர் வேடமிட்டு தமிழர்களின் பாரம்பரியத்தையும்,கலாச்சாரத்தையும் போற்றும் விதமாகவும், ராமாயணத்தை கொண்டாடும் விதமாக ஒரே நேரத்தில் நடனமாடி நாட்டியாஞ்சலி செய்து அசத்தினர்.

குழந்தைகளின் இ‌‌ந்த நாட்டியாஞ்சலி காரணமாக தனுஷ்கோடி பகுதிக்கு இன்று காலை 06 மணிமுதல் காலை 10 மணி வரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாபயணிகள் செல்ல விதிக்கப்பட்டிருந்தது. 

நாட்டிய அஞ்சலி முடிந்த பின்னர் தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பணியில் மற்றும் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தனுஷ்கோடி அரிச்சல்முனையில் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் நாட்டிய அஞ்சலி செய்த காட்சிகள் கண்களை கவரும் வகையில் இருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

To mark World Tourism Day 500 children performed Natyanjaliin Dhanushkodi dressed as Rama and Sita


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->