சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு உற்பத்தி 30 வீதம் குறைவு; பட்டாசு 25% வரை விலை உயர்வு..!
Firecracker production in Sivakasi for the Diwali festival has dropped by 30 percentage
சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் குறைந்துள்ள நிலையில், பட்டாசு விலை 25 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்தவுடன் அடுத்த ஆண்டு தீபாவளியை எதிர்நோக்கி பட்டாசு உற்பத்தி தொடங்குவது வழக்கம். அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தியும் கடந்த ஆண்டு தீபாவளி முடிந்த சில நாட்களில் தொடங்கியது.
இந்நிலையில், பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட தொடர் வெடி விபத்துகளைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதன் காரணமாக, 200-க்கும் மேற்பட்ட ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. இதனால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்காசிய நாடுகளில் நிலவிய போர்ப் பதற்றம் காரணமாக பட்டாசு தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பட்ட தொடர் விபத்துகளைத் தொடர்ந்து விடுமுறை தினங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் நடப்பாண்டில் வழக்கத்தைவிட 30 சதவீதம் பட்டாசு உற்பத்தி குறைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், உற்பத்தியை தீவிரப்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.
English Summary
Firecracker production in Sivakasi for the Diwali festival has dropped by 30 percentage