காதலனுடன் ஹோம்ஸ்டேவில் தங்கிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!
Shocking details emerge in the investigation into the mysterious death of a young woman who stayed at a homestay with her boyfriend
அசாம் மாநிலம் கவுகாத்தியில் காதலுடன் 05 நாட்கள் 'ஹோம்ஸ்டே' தங்கும் விடுதியில், தங்கியிருந்த மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'ஹோம்ஸ்டே' தங்கும் விடுதியில் மயங்கிய நிலையில் கிடந்த குறித்த இளம்பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
இதுக்குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்த நிலையில், காதலனுடன் 05 நாட்களாக ஹோம்ஸ்டேவில் தங்கி இருந்த பெண்ணிற்கு என்ன நடந்தது?, தற்கொலையா? இல்லை வேறு ஏதேனும் அசம்பாவிதமா? என போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாராபூர் பகுதியில் வசித்து வந்த நிமிஷா தகுரியா என்ற இளம்பெண், கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பயின்று வந்துள்ளார். அவரது காதலன் ஆசிஃப் அலி ரேபிடோ டிரைவாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். சம்பவம் நிகழ்ந்த 'ருத்ராஸ் கிச்சன்' ஹோம்ஸ்டேவில் கடந்த 05 நாட்களாக அவர்கள் தங்கி இருந்துள்ளனர்.

சம்பவம் நிகழ்ந்த அன்று அதிகாலை 02 மணிக்கு நிமிஷா, தனது தாயைத் தொடர்புகொண்டுள்ளார். அப்போது தனது காதலனால் தாக்கப்பட்டதாகவும், மார்பில் உதைக்கப்பட்டதாகவும் கூறியதாகத் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல்கலை கழக விடுதியில் நிமிஷாவுடன் தங்கி இருந்த தோழிகளை அழைத்துக் கேட்டபோது அவர் காதலனுடன் சென்றது தெரிய வந்துள்ளது.
இதனால் ஆசிஃப் அலி, தான் தனது மகளை அடித்து கொன்றிருப்பதாகப் பெண்ணின் தந்தை பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். முதற்கட்ட விசாரணையில் மூன்று இளைஞர்கள் நிமிஷாவை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். பெண்ணின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் முறையாக தகவல் அளிக்கவில்லை. நிமிஷாவின் உயிரிழப்புக்குப் பின் அவரது செல்போனும் காதலனின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு இப்படி அடுத்தடுத்து பல்வேறு சந்தேகங்கள் நீடிப்பதால் இது திட்டமிட்ட கொலையாகக் கூட இருக்கலாம் என விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி கைது செய்யப்பட்ட ஆசிஃப் அலியிடம் தொடர் விசாரணை நீடிக்கும் நிலையில் விடுதியின் உரிமையாளரிடம் விசாரித்துள்ளனர்.
அத்துடன், உயிரிழந்த பெண் ஏற்கனவே பலமுறை அங்கு தங்க வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் போலீசாருக்கு சந்தேகத்தைக் கூட்டியுள்ளது. விசாரணையின் முடிவிலேயே நிமிஷாவின் இறப்பில் உள்ள மர்மம் வெளிவரும் என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shocking details emerge in the investigation into the mysterious death of a young woman who stayed at a homestay with her boyfriend