'சோசியல் மீடியாவுல ஒரு பெரிய முட்டாள் கூட்டம் இறங்கியிருக்காங்க. அவங்ககிட்ட வாதம் பண்ணா, நாமளும் முட்டாள் ஆகிடுவோம்''; சர்ச்சையை கிளம்பியுள்ள நடிகர் சூர்யா..!
Actor Suriya has sparked controversy by stating that a large group of fools has descended upon social media
சமீபத்தில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், அவரை தவெக ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
அதன்பின்னர் அதற்கு தொலைக்காட்சி சார்பிலும் விஜய் சேதுபதி தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், 'கருப்பு', 'விஸ்வநாத் அன்ட் சன்ஸ்' ஆகிய இரண்டு வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ள நடிகர் சூர்யாவின் அடுத்த படமான 'சீன்' தீபாவளி ரேஸில் களமிறங்கவுள்ளது.
இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 'ஹாட்ரிக்' வெற்றி கொடுக்கும் முனைப்பில் உள்ள சூர்யா, ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்றை நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசிய கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, ''அன்பை மட்டுமே விதைப்போம். சோசியல் மீடியாவுல ஒரு பெரிய முட்டாள் கூட்டம் இறங்கியிருக்காங்க. அவங்ககிட்ட வாதம் பண்ணா, நாமளும் முட்டாள் ஆகிடுவோம். அவங்க அப்படியே இருக்கட்டும். அவங்கள மாத்த முயற்சி பண்ணுவது ரொம்ப கஷ்டம். ஒரு சிலருக்கு நாம சொல்றது புரியும். ஆனா, அந்த முட்டாள் கூட்டத்துக்கு அது புரியாது. சோ.. நேரத்தையும், எனர்ஜியையும் வீணாக்காதீங்க. உங்களுக்குப் பிடிச்சதை தினமும் பண்ணுங்க... கண்டிப்பா, உங்களுக்கு வெற்றி கிடைக்கும்... எல்லோருக்கும் அன்பை மட்டுமே கொடுங்க'' என்று கருத்து கூறியுள்ளார்.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் முட்டாள் கூட்டம் ஒன்று உருவாகியுள்ளதாக, நடிகர் சூர்யா யாரை குறிப்பிடுகிறார் என்ற கேள்வியும், சர்ச்சையும் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், நடிகர் விஜய்சேதுபதி பேசிய இந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது நடிகர் சூர்யா பேசியுள்ளகருத்துகளுக்கும் ஆதாரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் இணையத்தில் களமிறங்கியுள்ளனர்.
English Summary
Actor Suriya has sparked controversy by stating that a large group of fools has descended upon social media