சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் ரத்து; மாற்று திட்டம் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை..! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு பதில் தினசரி ரூ.50 உணவுப்படி வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சியில்24,264 தூய்மை பணியாளர்களுக்கு உணவுப்படி தர ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உணவுக்கு பதில் உணவுப்படி வழங்க 92% தூய்மை பணியாளர்கள் கேட்டுக் கொண்டதாக அரசாணையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ஆம் தேதி சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை அப்போதைய திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஷிப்ட் அடிப்படையில் பணி செய்து வரும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை, மாலை, இரவு என 03 வேளைகளிலும் இலவச உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இத்திட்டத்தை ரத்து செய்து இன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் சுமார் 92 சதவீத தூய்மைப்பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் உணவிற்கு பதிலாக உணவுப்படி பணமாக வழங்க வேண்டும் எனவும், அது தங்களுக்கு பயணுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

உணவு வழங்கும் திட்டதிற்கு மாற்றாக தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ரூ.50 உணவுப் படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனபடி, 24,264 தூய்மை பணியாளர்களுக்கு உணவுப்படி வழங்க ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Scheme to provide food to sanitation workers in the Chennai Corporation cancelled


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->