ஸ்ரீவில்லிபுத்தூர் -மேகமலை புலிகள் காப்பகம் பெருமாள் மொட்டை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ; வழிபாட்டிற்கு மலையேறிச் சென்றவர்கள் அடிவாரம் திரும்பியுள்ளார்களா என அச்சம்..!
A forest fire is raging in the Perumal Mottai area of the Srivilliputhur Megamalai Tiger Reserve
ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகம் மாவூத்து மலைக்கு மேலே உள்ள அடர்வனப் பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த வனப்பகுதியில் பெருமாள் மொட்டை மலையில் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி, இன்று (செப்.26) புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை ஆகும். இதனை முன்னிட்டு ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் பெருமாள் மொட்டை மலையில் பெருமாள் கோயில் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், மாலை பெருமாள் மொட்டை பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை வெயில் மற்றும் காற்றின் வேகம் காரணமாக மலை முழுவதும் காட்டுத்தீ பற்றி எரிகின்றது.
இன்று புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு மலையேறிச் சென்றவர்கள் அனைவரும் அடிவாரம் திரும்பிவிட்டனரா என்பது உறுதியாக தெரியவில்லை என்பது இன்னும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து பார்க்கும் போது மலையில் காட்டுத்தீ பற்றி எரிவது நன்கு தெரிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த வனப்பகுதியில், யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் நிறைந்துள்ளன. இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதால் வன உயிரின ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். வனத்துறையினர் மற்றும் காவலர்கள் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
A forest fire is raging in the Perumal Mottai area of the Srivilliputhur Megamalai Tiger Reserve