1993-ல் விஜய் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார் ஜேசன் சஞ்சய்...! - சிலிர்த்துப் பேசிய நடிகர் சிரஞ்சீவி...! - Seithipunal
Seithipunal


விஜய் 1993 முதல் 1995-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இளமைத் தோற்றத்தில் எப்படி இருந்தாரோ, அதே தோற்றத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இருப்பதாக நடிகர் சிரஞ்சீவி பாராட்டியுள்ளார். மேலும், தனது தாத்தா மற்றும் தந்தையிடம் இருந்து கிடைத்த கதை சொல்லும் திறமை, கலை ஆர்வம் ஆகியவை ஜேசன் சஞ்சயின் இயக்குநர் பயணத்துக்கு அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நடிகரும் தமிழக முதல்-அமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு பணியையும், பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பணியையும் மேற்கொண்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் திரைப்படம் உருவாகியுள்ளது.

வருகிற அக்டோபர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.விஜய்யின் மகன் முதன்முறையாக இயக்குநராக களமிறங்குவதால் ‘சிக்மா’ படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதையொட்டி படக்குழுவினர் பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.ஜேசன் சஞ்சயும் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் பங்கேற்று தனது முதல் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்.

இந்த நிலையில், ‘சிக்மா’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டு ஜேசன் சஞ்சயை பாராட்டி பேசினார்.அப்போது அவர், ஜேசன் சஞ்சயை பார்க்கும்போது 1993, 1994, 1995-ம் ஆண்டுகளில் விஜய் எப்படி இருந்தாரோ, அதே தோற்றம் நினைவுக்கு வருவதாக தெரிவித்தார்.

மேலும், ஜேசன் சஞ்சயின் தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் பாட்டி சோபா ஆகியோரின் கலை ஆர்வமும், கதை உருவாக்கும் திறனும் அவருக்கு இயல்பாகவே கிடைத்திருப்பதாக சிரஞ்சீவி குறிப்பிட்டார். இதன் காரணமாகவே அவருக்கு திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் திரையுலகில் தனக்கென உயரத்தை உருவாக்கியதைப் போல, ஜேசன் சஞ்சயும் ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் தான் விரும்பும் உயரத்தை அடைந்து, திரையுலகில் சிறப்பான இடத்தைப் பெறுவார் என சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jason Sanjay same Vijay 1993 Actor Chiranjeevi spoke excitement


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->