நெல்லையில் அதிர்ச்சிச் சம்பவம்...! பன்றித் தொல்லையால் வெடித்த மோதல்...! - தட்டிக்கேட்ட தொழிலாளியை தீர்த்துக்கட்டிய வாலிபர்...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி அருகே வைக்கோல் படப்பையை பன்றி நாசம் செய்த விவகாரம் எதிர்பாராத கொலை சம்பவத்தில் முடிந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளியை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படும் வாலிபரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி கட்டளை பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் நடராஜன் (38). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். நடராஜன் தனது வீட்டில் பன்றிகளை வளர்த்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு அவரது பன்றி ஒன்று, அருகில் வசித்து வந்த கருப்பசாமி (26) என்பவருக்கு சொந்தமான இடத்தில் குட்டிகளை ஈன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் நடராஜனின் பன்றி, கருப்பசாமியின் வீட்டின் அருகே இருந்த வைக்கோல் படப்பையை நாசம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அந்த பகுதியில் மண்ணையும் கிளறியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமிக்கும், நடராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் தகராறு முற்றியதாக கூறப்படுகிறது.அப்போது கருப்பசாமி வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து நடராஜனை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் நடராஜனின் தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டன. ரத்தம் அதிகளவில் வெளியேறிய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.நடராஜன் காயமடைந்து கிடந்ததை பார்த்த குடும்பத்தினரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அவசர ஊர்தி மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நடராஜன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மருத்துவமனையில் அவரது உடலை பார்த்த குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுதனர்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிஸ்வஜித் பாண்டா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.சீவலப்பேரி காவலர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, அங்கு கிடைத்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், நடராஜன் பன்றிகளை வளர்த்து வந்ததும், அவரது பன்றி கருப்பசாமியின் வீட்டின் அருகே இருந்த வைக்கோல் படப்பையை நாசம் செய்ததையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், இதற்கு முன்பு இருவருக்கும் இடையே எந்தவித முன்விரோதமும் இருந்ததாக தெரியவில்லை என்றும், திடீர் ஆத்திரத்தில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதாகவும் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துக்கு பிறகு கருப்பசாமி காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். இதையடுத்து அவரை காவலர்கள் கைது செய்து, கொலை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பன்றி குட்டிகளை ஈன்றது முதல் வைக்கோல் படப்பை நாசம் செய்தது வரை நீடித்த பிரச்சினை, இறுதியில் கூலித்தொழிலாளியின் உயிரை பறித்த சம்பவமாக மாறியது சீவலப்பேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking incident Paddy clash erupted due pig problem young man who beat worker who knocked him over


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->