தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு...! மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முன் ஆசிரியர்கள் சுவைத்துப் பார்க்க வேண்டும்...! - புதிய விதிமுறைகள் - Seithipunal
Seithipunal


பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆசிரியர்களும் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. சமைக்கப்பட்ட உணவு மாணவர்களின் உடல்நலத்துக்கு ஏற்றதாக உள்ளதா என்பதை ஆசிரியர்கள் பரிசோதித்து உறுதி செய்த பின்னரே மாணவர்களுக்கு பரிமாற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டம் கொட்டையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 40 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் கல்வித்துறை வட்டாரத்தில் கவனத்தை ஏற்படுத்தியது.இதைத்தொடர்ந்து, பள்ளிகளில் காலை உணவு தயாரித்தல், பாதுகாத்தல் மற்றும் மாணவர்களுக்கு பரிமாறுதல் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தொடக்கக் கல்வித்துறை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது.

சமையல் அறையில் உணவு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை தவிர வேறு எந்தப் பொருட்களையும் வைத்திருக்கக்கூடாது. சமையல் அறையை புகை, தூசி மற்றும் நூலாம்படை இல்லாத வகையில் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மற்றும் மாணவர்களுக்கு உணவு பரிமாறும் பாத்திரங்களை ஒவ்வொரு முறையும் பயன்படுத்துவதற்கு முன்பும், பயன்படுத்திய பின்னரும் நன்றாக சுத்தம் செய்து வைக்க வேண்டும்.

சமைத்து முடிக்கப்பட்ட உணவை மாணவர்களுக்கு பரிமாறுவதற்கு முன்பு அதன் தரம் மற்றும் பாதுகாப்பை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் உடல்நலத்துக்கு ஏற்ற உணவு என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே உணவு வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமைத்து முடித்த உணவை பரிமாறும் பாத்திரங்களில் முழுமையாக மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கும் நேரத்தில் மட்டும் அந்த மூடிகளை திறக்க வேண்டும்.மேலும், சமையல் நடைபெறும் நேரத்திலும், உணவு தயாரிக்கப்பட்ட பின்னர் வேறு பாத்திரங்களுக்கு மாற்றி வைக்கப்படும் போதும் உணவு தூசி, அழுக்கு உள்ளிட்டவை படாதவாறு மூடப்பட்ட நிலையில் பாதுகாப்பாக இருப்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு உணவு பரிமாறும் பணியை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தினமும் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும். உணவின் தரம், தூய்மை, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் எவ்வித குறைபாடும் ஏற்படாத வகையில் பள்ளி நிர்வாகம் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elementary Education Department orders action Teachers must taste breakfast before serving students New regulations


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->