திருவள்ளூரில் அதிரடி தீர்ப்பு...! பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை...! - நீதிமன்றம் அதிரடி - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 54 வயது பெண், கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி செண்ணாங்காரணி கிராமத்தில் வசிக்கும் தனது மகளின் வீட்டிற்கு சென்றிருந்தார்.

அன்று இரவு சுமார் 8 மணியளவில் அவர் வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார்.அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த மர்ம நபர் ஒருவர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ராஜா (24) என்பவருக்கு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவலர்கள் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் ராஜா சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கடம்பத்தூர் ஜெய்கணேஷ் ஆஜராகி வாதிட்டார். வழக்கின் சாட்சிகள் விசாரணை மற்றும் ஆவணங்கள் பரிசீலனை நிறைவடைந்த நிலையில், மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், ராஜா மீதான குற்றச்சாட்டு விசாரணையில் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் 16 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dramatic verdict Thiruvallur youth who harassment woman sentenced to double life imprisonment Court takes action


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->