இயக்கியதே இரண்டு படங்கள் தான் ; 2வது படம் அமரனுக்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி; இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி..!
Director Rajkumar Periasamy expresses happiness over his second film Amaran winning a National Award
72-வது தேசிய விருது வழங்கும் நிகழ்வு நேற்று குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் (கெவாடியா) மிக விமரிசையாக நடைபெற்றது. வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த விருது வழங்கும் விழா புதுடெல்லிக்கு வெளியே, புகழ்பெற்ற ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity) பின்னணியில் நடத்தப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்கள் இந்த விழாவில் விருதுகளைப் பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். இதில் 'அமரன்' படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான விருது ராஜ்குமார் பெரியசாமிக்கு வழங்கப்பட்டது. அகமதாபாத் வழியாக விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த, ராஜ்குமார் பெரியசாமி, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
72-ஆவது தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமரன் திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருது என்பது மிக உயரிய விருதாக கருதுவதக்கவும், இதுவரை இரண்டு படங்கள் தான் இயக்கி இருக்கிறேன். தற்பொழுது மூன்றாவது படம் சென்று கொண்டு இருக்கிறது. இரண்டாவது படமான அமரன் திரைப் படத்திற்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாம்பரம் மேடவாக்கம் சாலையான முக்கியமான சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என்ற பெயர் வைத்திருப்பது மிக சந்தோஷமான விஷயம் என்றும், காஷ்மீரில் அவர் பணியாற்றிய பெட்டாலியன் இருக்கு அசோக் சக்கர பெட்டாலியன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சென்னையில் அவருக்கு ஒரு முக்கியமான அங்கீகாரம் கொடுத்து இருப்பது சந்தோஷமான விஷயம் என்று குறிப்பிட்டதோடு, என்னுடன் சேர்த்து மூன்று பேர் அமரன் திரைப்படத்திற்காக விருது பெற்று இருக்கிறார்கள் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
English Summary
Director Rajkumar Periasamy expresses happiness over his second film Amaran winning a National Award