சூரத்தில் அதிர்ச்சி; ரூ.10,000 சம்பள பாக்கியை தராததால் ஆத்திரம்; ரூ.24 கோடி ஜவுளியை எரித்த நாசமாக்கிய கணக்காளர் கைது..! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் சூரத் நகரில் 10 ஆயிரம் ரூபா சம்பள பாக்கி தராத ஆத்திரத்தில், சுமார் ரூ.24 கோடி மதிப்பிலான ஜவுளிககளை எரித்து நாசம் செய்த கணக்காளரை போலீசார் கைது செய்துள்ளனர். சூரத்தில் உள்ள ஷ்யாம் சங்கினி ஜவுளிச் சந்தையில், கடை எண் 639-இல் திண்டோலியைச் சேர்ந்த வினோத் பண்டிட் சாவ்லே என்பவர் சில மாதங்கள் கணக்காளராகப் பணியாற்றி வந்துள்ளார். 

அவர், கணக்குகளைச் சரியாகக் கையாளாத காரணத்தால் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்துடன், கடை உரிமையாளர் அவருக்கு ரூ.10,000 சம்பள பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குறித்த நபர், தன் முன்னாள் முதலாளிக்குப் பாடம் புகட்ட முடிவு செய்துள்ளார்.

அதாவது, முதலாளியை பழிவாங்கும் நோக்கில், அருகிலுள்ள கிராமத்தில் ரூ.150க்கு பாட்டில் மற்றும் பையில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு வந்துள்ளார்.  சம்பவ தினமான கடந்த 08-ஆம் தேதி இரவு 09 மணிக்குச் சந்தைக்குள் நுழைந்து 05வது மாடி படிக்கட்டில் பதுங்கியிருந்துள்ளார்.

பின்னர் நள்ளிரவு 12.30 மணி அளவில் ஆள்நடமாட்டம் குறைந்ததும் முகத்தை வெள்ளைத் துணியால் மூடிக்கொண்டு, 06வது மாடியில் உள்ள கடை வாசலில் வைக்கப்பட்டிருந்த துணி பார்சல்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். 

அப்போது பஞ்சு மற்றும் துணிகள் என்பதால் தீ மளமளவென பரவி அடுத்தடுத்த 14 கடைகள் முற்றிலுமாக நாசமாகியுள்ளது. சுமார் ரூ.24 கோடி மதிப்பிலான ஜவுளிகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர்.

இதையறிந்துக்கொண்ட குற்றவாளி தன் செல்போனை அணைத்துவிட்டு மனைவி, குழந்தையுடன் அயோத்திக்கு தப்பியுள்ளார். இந்நிலையில் சூரத் திரும்பிய அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சூரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accountant arrested in Surat for burning and destroying textiles worth rs 24 crore in a fit of rage over unpaid salary of rs10000


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->