ஆசிய விளையாட்டு போட்டி 2026; வெண்கலம் வென்ற தமிழக பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து; 30 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 04, 2026 வரை நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, இந்தியா 01 தங்கம், 04 வெள்ளி, 06 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை வென்றுள்ளது.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் ஹரிஹரனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.  இந்நிலையில், பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெவிக்கப்பட்டுள்ளதாவது;

''ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஹரிஹரன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

அவரது திறமையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 'ELITE Sportsperson Scheme' திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுவரும் திரு.ஹரிஹரன் அவர்களின் இந்த சாதனை, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது. விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்கு தமிழ்நாடு அரசு என்றும் தோள்கொடுக்கும். ஹரிஹரன் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Vijay has announced financial assistance of rs30 lakh for badminton player Hariharan who won a bronze medal at the Asian Games


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->