'ஜெம் வீரமணியின் பாலியல் கொடூரத்தில் எந்த குற்றவாளியும் தப்பிக்கக்கூடாது'; இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்..!
The Communist Party of Tamil Nadu insists that no culprit involved in the sexual atrocities committed by Gem Veeramani should escape punishment
''ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் தொடர்புடைய எந்தக் குற்றவாளியும் தப்பிவிடாத வகையில் அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும்.'' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறித்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''ஜெம் கிரனைட்ஸ் முதலாளி வீரமணி ஏழு முதல் 13 வயது வரை உள்ள ஆதரவற்ற சிறுமியர்களை ஏமாற்றி, பாலியல் வன்முறை செய்த குற்றத்துக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூரக் குற்றச் செயல்களுக்கு அவரிடம் 23 ஆண்டுகள் உதவியாளராக இருந்த கணேசன், சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் மட்டுமே காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றச் செயல்களுக்கு உதவியவர்கள், கவனத்துக்கு வந்து நடவடிக்கை எடுக்க தவறியவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
இந்தக் குற்றம் தொடர்பான ‘வீடியோ’க்கள் அடங்கிய பென் டிரைவ்களை காவல் துறை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழக அரசு இவ்வழக்கை மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையுடனும் கையாண்டு வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய எந்தக் குற்றவாளியும் தப்பிவிடாத வகையில் அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.'' என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
English Summary
The Communist Party of Tamil Nadu insists that no culprit involved in the sexual atrocities committed by Gem Veeramani should escape punishment