எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட தவெக வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது; கார்த்தி சிதம்பரம் எம்.பி..!
MP Karti Chidambaram states that TVK should not have given an opportunity to contest again in the by election to those who had resigned from their MLA posts
தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நீடிக்கக் கூடாது என்றும், அவர் நடத்தைக்கு எதிராக 14 முறை தேர்தல் ஆணையர்கள் புகார் அளித்தும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்று சிவகங்கை எம்.பி கார்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர்கூறியதாவது;
தேர்தல் ஆணையத்திலுள்ள ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டும் தன்னிசையாக முடிவு எடுக்கக் கூடாது என்பதற்காகவே தலைமை தேர்தல் ஆணையர் உட்பட 03 தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், நேற்று வந்த செய்தியில் ஒரு தேர்தல் ஆணையர் மாற்றத்தை 02 தேர்தல் ஆணையர்கள் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
அத்துடன், நான்கு முறை மம்தா பானர்ஜி சின்னத்தை முடக்கி இருக்கின்றதாகவும், முதல்வராக இருந்த கேஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், புதிய வாக்காளர்களிடம் தாய், தந்தை, தாத்தா, பாட்டி ஏற்கெனவே வாக்காளர்களாக இருக்கிறார்களாக என, கேள்வி கேட்டு புதிய வாக்காளர்களை நீக்க முயற்சி நடக்கிறதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் எழுவது ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றும், தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் நீடிக்கக் கூடாது. அவர் நடத்தைக்கு எதிராக 14 முறை தேர்தல் ஆணையர்கள் புகார் அளித்தும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய கார்த்தி தெரிவிக்கையில், ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு தொடர்பாக பத்திரிக்கையில் வரும் செய்தியை வைத்து கருத்து சொல்கிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விசாரணைக்குப் பிறகே எதையும் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட தவெக வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது என்றும், தவெகவுக்கு கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர் தேவையில்லை. அவர்கள் கட்சியில் இருந்தவர்களுக்கு இடம் கொடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதைவிட முதலில் மக்களுக்கான அடிப்படை வசதிகளை சரிசெய்ய வேண்டும் என்றும், சாலைகளை சரி செய்யவேண்டும். மின்தடை இன்றி பார்த்துக் கொள்ளவேண்டும். பெரிய திட்டங்களை எடுத்தவுடன் செய்யவேண்டிய அவசியமில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தன்னை பொறுத்தவரையில் தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் தலைமை செயலகத்தை வைக்க வேண்டும் என்றும், சென்னையிலேயே கட்ட தேவையில்லை. ஒவ்வொரு துறையையும் மதுரை, கோவை, திருச்சி என பிரிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
English Summary
MP Karti Chidambaram states that TVK should not have given an opportunity to contest again in the by election to those who had resigned from their MLA posts