'ஜன நாயகன்' ஆன்லைன் கசிவு வழக்கு...! உமா சங்கரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி...! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உமா சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.விஜய் தனது கடைசி திரைப்படம் என அறிவித்து நடித்த ‘ஜன நாயகன்’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள் தொடர்பாக தணிக்கை வாரியம் மறுஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு படத்தை அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 3-ந்தேதி திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது. இதுதொடர்பாக படத்தை தயாரித்த நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இணையவழி குற்றப்பிரிவு காவலர்கள் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களில் 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட உமா சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து உமா சங்கரின் சகோதரி ரேணுகாதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது காவல்துறை தரப்பில், திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்பே சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்டதில் உமா சங்கருக்கு முக்கிய பங்கு இருந்ததாக வாதிடப்பட்டது.

எனவே, அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரேணுகாதேவி தரப்பு வழக்கறிஞர்கள், உமா சங்கர் தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும், திரைப்படத் துறையில் படத்தொகுப்பு பணியில் ஈடுபடுபவர் அல்ல என்றும் வாதிட்டனர்.

மேலும், உரிய காரணங்களை முழுமையாக பரிசீலிக்காமல் அவரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், எனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், ‘ஜன நாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் உமா சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவு ‘ஜன நாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jana Nayagan online leak case Madras High Court takes action by quashing Uma Shankar goonda law


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->