இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடத் துடிக்கும் தவெக அரசு குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது அக்கறை காட்ட வேண்டாமா?; கனிமொழி எம்.பி கேள்வி..!
MP Kanimozhi asks whether the TVK government should not show concern for saving childrens lives
இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடும் அக்கறையை குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா?. என்று திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''சென்னை, தேனி, தர்மபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்படை தேவையான உயிர்காக்கும் மருந்துகளை வழங்க முடியாமல் என்ன செய்துக்கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை?
இளம்பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடத் துடிக்கும் அக்கறையைக் குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா?. குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உடனே உறுதி செய்ய வேண்டும்.'' என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
MP Kanimozhi asks whether the TVK government should not show concern for saving childrens lives