இணையத்தில் ட்ரெண்டாகும் AI எடிட் 80s போட்டோ; பின்னால் பெரும் ஆபத்து; சைபர் பாதுகாப்பு நிபுணர் ஷாக் தகவல்..!
A cybersecurity expert has issued a startling warning about the significant risks associated with the AI edited 80s style photos currently trending online
சமூக ஊடகங்களில் தற்போது எங்கு பார்த்தாலும் 80-களின் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள்தான் ட்ரென்டிங். பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கூட, 80-களின் தோற்றத்தில் தங்களின் புகைப்படங்களை உருவாக்கிப் ஜாலியாக பகிர்ந்துள்ளனர்.
சமாகவலைத்தளங்களை பயன்படுத்தும் எல்லோரும் எதோ ஒரு புகைப்படத்தையேனும் இவ்வாறு எடிட் செய்து பதிவிட்டு இருக்கலாம். ஆனால், இந்தப் புகைப்படங்களுக்குப் பின்னால் ஒரு பெரிய ஆபத்து இருக்கலாம் என இணையவியல் வல்லுநர்கள் ஷாக் கொடுத்துள்ளனர்.
சைபர் பாதுகாப்பு நிபுணர் கனிஷ்க் கவுர், என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில், 80-களில் வைரலான செயற்கை நுண்ணறிவுப் போக்கினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.

அதாவது, 80களின் செயற்கை நுண்ணறிவுப் போக்கு போன்ற சமூக ஊடகப் போக்குகள் மூலம், பயனர்கள் தங்களின் முகம், விழித்திரை ஸ்கேன், கைரேகைகள் போன்ற தனிப்பட்ட உயிரியல் தகவல்களை நிறுவனங்களுக்குத் தெரியாமலேயே வழங்குகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.
இந்தச் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், பயனர்களின் தரவுகளை இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களுக்கும் தங்களின் சொந்த நலனுக்காகவும் பயன்படுத்துகின்றதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த இந்த பயோமெட்ரிக் தரவுகள் டிஜிட்டல் அடையாள சரிபார்ப்புக்குப் பயன்படுத்தப்படலாம் என்றும், இணையக் குற்றவாளிகள் இதைத் தவறாகப் பயன்படுத்தி நிதி மோசடி செய்யவும், வங்கிக் கணக்குகளைக் முடக்கவும் செய்ய கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது நீங்கள் பதிவேற்றிய புகைப்படங்களையும் காணொளிகளையும் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவால் டீப்ஃபேக் காணொளிகளையும் பொய்க் கூற்றுகளையும் உருவாக்க முடியும். இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி, வாக்காளர்களைத் திசை திருப்பவும், எதிர்காலத் தேர்தல்களில் தலைவர்களின் போலிக் காணொளிகளைப் பரப்பும் அபாயம் உள்ளது.

இந்த மோசமான சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவுத் தளங்களில் பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில், எதிர்காலத்தில் அவர்களின் டிஜிட்டல் அடையாளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படவோ, கொடுமைப்படுத்தப்படவோ அல்லது இணையவழித் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படவோ வாய்ப்புள்ளது.
இதுபோன்ற புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டவுடன், அவற்றிலுள்ள தரவுகளை மீட்டெடுப்பது கடினமாகிறது. இதனால், பயனர்கள் தங்களின் அசல் மற்றும் அந்தரங்கமான புகைப்படங்களை செயலிகளில் பதிவேற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என இணையவியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
A cybersecurity expert has issued a startling warning about the significant risks associated with the AI edited 80s style photos currently trending online