மாணவர்கள் பாதுகாப்பு மையம்...! பள்ளி வளாகத்தில் காவல்துறை விசாரணை நடத்துவது எப்படி...? - பள்ளிக்கல்வித்துறை புதிய விதிமுறைகள் - Seithipunal
Seithipunal


பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு முக்கிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது. இதுதொடர்பான விழிப்புணர்வு கையேடு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், அதன் முக்கிய அம்சங்கள் குறித்து கல்வித்துறை தற்போது மீண்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை அடையாளம் காணுதல், அவற்றை தடுப்பதற்கான சட்ட விதிமுறைகளை அறிந்து கொள்ளுதல், பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்த சம்பவத்தை வெளிப்படுத்தும்போது அதனை உரிய முறையில் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கையேட்டில் இடம்பெற்றுள்ளன.மேலும், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்கும் முறைகள், அதனை எதிர்கொள்ளும் பொறுப்பில் உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் எழும்போது தலைமை ஆசிரியர், பள்ளி முதல்வர் அல்லது பள்ளி பாதுகாப்பு மற்றும் ஆலோசனைக் குழுவிடம் தகவல் தெரிவிக்கலாம். அந்தக் குழுவில் குறைந்தபட்சம் 3 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை காவலர்களே மேற்கொள்ள வேண்டும். பள்ளி நிர்வாகம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தக்கூடாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

காவலர்கள் பள்ளி வளாகத்துக்கு வரும்போது சீருடையில் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவரிடம் பள்ளி வளாகத்திற்குள் விசாரணை நடத்த காவலர்களை அனுமதிப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் மாணவரை பள்ளி வளாகத்துக்குள் வைத்து விசாரிக்க காவலர்களை எந்தப் பள்ளியும் அனுமதிக்கக்கூடாது என்றும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.குழந்தைகளின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் செயல்பட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Student Safety Center How conduct police investigation school premises New regulations from Department School Education


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->