'எல் நினோ' வின் எதிரொலி; ஆபத்தான நிலையில் மஹாராஷ்டிரா; 75% நிலத்தில் வறட்சி என மாநில அரசு அறிவிப்பு..!
State government announces drought in 75 percentage of Maharashtras land due to the El Nino impact
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வழக்கத்திற்கு மாறாக வெப்பம் ஏற்படுவதால் 'எல் நினோ' தாக்கம் உலகை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்தக் காலநிலை மாற்றத்தால், உலகின் ஒருசில நாடுகளில் அதீத வறட்சியும், மற்ற சில நாடுகளில் பெரும் வெள்ளமும் ஏற்பட்டு, பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்த எல் நினோ தாக்கத்தினால் இந்தியா மாதிரியான ஆசிய நாடுகளில், வறட்சி, வெள்ளம் ஆகிய இரண்டும் ஒருசேர வந்து, மக்களை அல்லாட வைத்துள்ளது. சமீப காலமாக உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் எல் நினோவால், இந்தியாவின் முக்கிய மாநிலமான மஹாராஷ்டிரா மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்தியா பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பு செய்யும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதன்மையானது.

இந்த மாநிலத்தில், மொத்தமாக 358 தாலுக்காக்கள் இருந்து வருகின்றன. இதில், 265 தாலுக்காக்களில் தீவிர வறட்சி நிலவுவதாக, மகாராஷ்டிரா அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அம்மாநிலத்தில், கிட்டத்தட்ட 75 சதவீத நிலப்பரப்பு வறட்சியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு மழை பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. போதுமான மழை பெய்யாதது போன்ற காரணிகளால், இந்த வறட்சியான சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
State government announces drought in 75 percentage of Maharashtras land due to the El Nino impact