தமிழக அரசில் என்ன நடக்கிறது..? அண்ணாமலை கேள்வி..! - Seithipunal
Seithipunal


''தவெக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில், அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்துவிட்டு, எதிர்ப்பு வந்த பிறகு திரும்பப் பெறுவது, நிர்வாகத்தில் தெளிவின்மையையும், இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.'' என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; 

"முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம் முதல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடு, மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு தொடர்பான RTI விலக்கு வரை, ஒரு முடிவு எடுக்கப்படுகிறது, அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததும், உடனே அந்த முடிவு திரும்பப் பெறப்படுகிறது.

இந்த ஒவ்வொரு முடிவும் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா? இல்லை, முதலமைச்சருக்கு தெரியாமல் அரசு நிர்வாகத்தில் இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா?

அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்துவிட்டு, எதிர்ப்பு வந்த பிறகு திரும்பப் பெறுவது, நிர்வாகத்தில் தெளிவின்மையையும், இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

ஒரு அரசு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன், அதன் சட்டரீதியான, நிர்வாகரீதியான மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம். தவெக அரசு, இத்தகைய முடிவுகளை அவசரமாக எடுத்து, பின்னர் எதிர்ப்பு எழுந்தவுடன் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, முடிவெடுக்கும் முறையில் அதிக கவனமும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai questions what is happening in the Tamil Nadu government


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->