''ஒருநாள் விடுப்பு இன்னும் பேப்பர்-லதான் இருக்கு..''; விஜய் அரசை விமர்சித்தாரா நடிகர் கார்த்தி..?
Actor Karthi criticized the tvk govt stating that the police forces one day leave policy still exists only on paper
கோவை பீளமேட்டில் உள்ள மகளிர் கல்லூரியில் முன்னாள் காவல் அதிகாரிகள் பொது நல அறக்கட்டளையின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் விழாவில் நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி, மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, ஐ.பி.எஸ். அதிகாரி திவ்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவுக்கு முன்னதாக அறக்கட்டளையின் 10-ஆம் ஆண்டு நிறைவு கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் விழாவில் நடிகர் கார்த்தி பேசும் போது கூறியதாவது;
தமிழகத்தில் புதிய (தவெக) அரசு அமைந்த பிறகு, காவல்துறையினர் ஒரு வாரம் பணியாற்றிய பின்னர் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அது தற்போது வரை பேப்பரில் மட்டுமே இருப்பதாக காவல்துறையினர் தன்னிடம் கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காவல்துறையில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லாததால், அதிகாரிகளால் விடுமுறை எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் குறிப்பிட்டார். தற்போது 10,000 காவல்துறையினர் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
மேலும், சமூக வலைதளங்களால் காவல்துறைக்கு அதிக அழுத்தம் ஏற்படுவதாகவும், இணையத்தில் ஒரு வழக்கு தொடர்பான தகவல் வெளியானவுடன், உடனடியாக அதைத் தீர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனால், போதிய ஆதாரங்களை சேகரிக்காமல் அவசரமாக வழக்குகளை முடிக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டி பேசினார்.
அத்துடன், காவல்துறையினரின் உடல் மற்றும் மனநலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், காவல் நிலையங்களில் உடற்பயிற்சிக் கூடங்கள் இருந்தாலும், பணிச்சுமை காரணமாக அவற்றைப் பயன்படுத்தக்கூட நேரமில்லை என்று காவல்துறையினர் கூறுவதாக தெரிவித்து இருந்தார்.
ஆகையால், காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை நடைமுறையில் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பாதுகாப்பது அரசுக்கும் மக்களுக்கும் முக்கியமான பொறுப்பு என்றும் நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.
English Summary
Actor Karthi criticized the tvk govt stating that the police forces one day leave policy still exists only on paper