''நாங்கள் ஒருபோதும் தலைகுனியவோ மண்டியிடவோ மாட்டோம்; காலக்கேயர்களுக்கு எதிராக நின்ற பாகுபலியைப் போல''; ஈரான் தூதரகம் பதிவிட்டுள்ள பாகுபலி காட்சி..!! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி 81வது ஐ.நா. பொதுச் சபை கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஈரான் அதிபர் பெஷெஷ்கியன், முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசியிருந்தார். 

அதாவது ''நாங்கள் ஒருபோதும் தலைகுனியவோ மண்டியிடவோ மாட்டோம், தடைகள். அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் ஈரானிய மக்களின் உறுதியை மட்டுமே வலுப்படுத்தும்.'' என்று  பதிலடி கொடுத்து இருந்தார். அத்துடன், எந்த நிர்ப்பந்தத்தையும் ஏற்காமல் பேச்சுவார்த்தையை தொடர ஈரான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் உரையை மேற்கோள் காட்டி, ஹைதராபாத்தின் ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் பாகுபலி திரைப்படத்தில் பிரபாஸ் போர்க்களத்தில் வீரர்களை வழிநடத்தும் படக்காட்சியை பதிவிட்டுள்ளது.

மேலும் அந்த பதிவில், ''ஐ.நா. பொதுச் சபையில் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அதிபர் டாக்டர் பெஷெஷ்கியன், 'நாங்கள் ஒருபோதும் தலைகுனியவோ மண்டியிடவோ மாட்டோம்' எனக்கூறினார். காலக்கேயர்களுக்கு எதிராக நின்ற பாகுபலியைப் போல. நாங்களும் எங்கள் தாய்நாட்டிற்காக சொந்த இரத்தத்தைத் தியாகமாகச் சிந்துவோம்" என்று வீடியோ கிளிப் உடன் தூதரகம் எழுதியுள்ளது. தற்போது இந்த பதிவு வைரலாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A scene from Baahubali posted by the Iranian Embassy ​​declaring they will not bow down to the United States


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->