“அது என் கல்யாணம்.. நான் பண்ணிப்பேன்!” – திருமணம் குறித்து கேள்வி கேட்டவர்களுக்கு நடிகை அஞ்சலியின் செம கூல் பதில்! - Seithipunal
Seithipunal


நடிகை அஞ்சலி, தனது திருமணம் குறித்து தொடர்ந்து கேட்கப்படும் கேள்விக்கு தனது பாணியில் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். திருமணத்துக்கு தனக்கு எந்த அவசரமும் இல்லை என்றும், அது தனது தனிப்பட்ட முடிவு என்றும் அஞ்சலி தெளிவுபடுத்தியுள்ள நிலையில், அவரது பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அஞ்சலி. தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் அவரிடம், “எப்போது திருமணம்?” என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து பேசிய அஞ்சலி, “அது என் கல்யாணம், நான் பண்ணிப்பேன். மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று புரியவில்லை” என தனது பாணியில் பதிலளித்துள்ளார்.

திருமணம் என்பது ஒருநாள் கொண்டாட்டம் மட்டுமல்ல என்பதையும் அஞ்சலி நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். “கல்யாணம் முடிந்ததும் எல்லாரும் அவரவர் வீட்டுக்குப் போய்விடுவார்கள். நான் மட்டும்தான் அங்கே இருப்பேன்” என்று கூறிய அவர், திருமணம் குறித்த தனது பார்வையை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

தனது நண்பர்களையும் அஞ்சலி விட்டுவைக்கவில்லை. திருமணம் என்றால் புதுத் துணி அணிவது, மேக்கப் போடுவது, போட்டோஷூட் செய்வது என நண்பர்கள் உற்சாகமாக இருப்பதாகக் கூறிய அவர், “நீங்கள் நல்லா டிரெஸ் பண்ணிட்டு ஜாலியாக இருப்பீங்க. அதற்காக நான் கல்யாணம் பண்ணிக்கணுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “மணப்பெண்ணுக்கு உண்மையிலேயே கல்யாணத்தில் சந்தோஷம் கிடைக்கிறதா? இல்லை, நண்பர்கள் டிரெஸ் பண்ணிக்கொண்டு போட்டோ எடுப்பதுதான் ஜாலியா?” எனவும் அஞ்சலி நகைச்சுவையாகக் கேட்டுள்ளார். அதற்கு மேலும், “நீங்களே கல்யாணம் பண்ணிக்கோங்க, நான் வந்து ஜாலியா கொண்டாடுறேன். நானும் நல்லா டிரெஸ் பண்ணிட்டு போட்டோஷூட் பண்ணிக்கிறேன்” என்று தனது நண்பர்களிடம் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

திருமணம் குறித்து இதுவரை எந்த தேதியையும் முடிவு செய்யவில்லை என்றும், தனக்கு தோன்றும் நேரத்தில் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அஞ்சலி தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது திரைப்படப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி, சமீபத்தில் விஷால் நடித்த ‘மகுடம்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது சினிமா பணிகளில் பிஸியாக இருக்கும் அஞ்சலி, திருமணம் குறித்து அவசரப்படவில்லை என்றும், “கல்யாணம் எப்போது?” என்று தொடர்ந்து கேட்பவர்களுக்கு தனது ஸ்டைலில் பதிலளித்து வருவதாகவும் அவரது பேட்டி மூலம் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Anjali super cool reply to those asking about her marriage


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->