நடன கலைஞர் மாரடைப்பால் மரணம்; இளம் நடிகை விஷம் குடித்து தற்கொலை; நடந்தது என்ன..?
Young actress commits suicide by consuming poison following the death of a dancer due to a heart attack
ஒடிசாவில் நண்பரான பிரபல கலைஞர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில், பிரபல நடிகை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டம் கப்ராகோல் பகுதியைச் சேர்ந்த சாது மெகர் - அகல்யா தம்பதியின் ஒரே மகன் பிரேம் மெகர் (25), மேற்கு ஒடிசா பகுதியில் புகழ்பெற்ற சம்பல்பூரி ஆல்பம் பாடல்களில் நடன கலைஞராக நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் கடந்த 03 நாட்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பிரபல சம்பல்பூரி நடிகையும், பக்திப் பாடகியுமான ஜாஸ்மின் மாஜி (22), கடந்த 25ம் தேதி திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் சம்பல்பூர் மாவட்டம் புர்லாவில் உள்ள விம்சார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி நடிகை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த 02 இளம் கலைஞர்களின் திடீர் மறைவு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர்கள் இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்திருக்கலாம் என்றும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால்தான் இந்த விபரீத மரணங்கள் நிகழ்ந்ததா என்ற பல்வேறு சந்தேகங்களும் எழுந்துள்ளன. இது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
English Summary
Young actress commits suicide by consuming poison following the death of a dancer due to a heart attack