''கட்டிய மனைவி, பிள்ளைகளுடன் வாழ வேண்டும்''; தாராபுரத்தில் முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி..! - Seithipunal
Seithipunal


தமிழக இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பானுமதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் ''தூயசக்தி என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் தீயசக்தி, கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெற்றது ஏன்? என தவெக அரசை விமர்சித்துள்ளார்.

அத்துடன், திமுகவாக இருந்தாலும், தவெகவாக இருந்தாலும், அங்கு இருப்பவர்கள் அதிமுகவினர்தான். அவர்கள் பெரும்பாலும் இங்கிருந்து சென்றவர்கள்தான். அதிமுகவை நம்பிதான் தவெக கட்சி நடத்த முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். தமிழகத்தை ஆள்வது அதிமுகதான் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி  பேசுகையில்,''ஆட்சி என்பது கவர்ச்சிகரமான வார்த்தைகளில் நடத்துவது அல்ல. ஆட்சி என்பது செயல். தவெகதான் தீய சக்தி. காலத்துக்கு ஏற்ப நடிக்கக் கூடியவர் தவெக தலைவர் விஜய்.'' என்று சாடியுள்ளார்.

அத்துடன், உங்கள் கட்சிக்காரர்களைப் போய்ப் பாருங்கள். வாக்காளர்களைப் போய்ப் பாருங்கள். அதைவிட்டு விட்டு எங்கள் கட்சிக்காரர்களை ஏன் கதவைத் தட்டிக் அழைக்கிறீர்கள் என்றும், நடந்து முடிந்த தேர்தலில் தவெக தலைவருக்கே நம்பிக்கை இல்லாததால்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் என்றும், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஓர் இடத்தில்தான் போட்டியிட்டோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தவெகவினர் விபத்தின் காரணமாக ஆட்சிக்கு வந்துள்ளனர். அதை தக்க வைக்க குதிரை பேரம் நடத்தி, ஆட்சியை தக்க வைக்க நினைக்கின்றனர் என்று கடுமையாக முதல்வர் விஜய் விமர்சித்துள்ளார்.

மேலும், ''உங்கள் வீட்டு அண்ணனாக இருப்பேன், மாமனாக இருப்பேன் என்று பச்சைப் பொய் பேசுகிறார். பாசம் என்று சொன்னால் தாய், தந்தையோடு வாழ வேண்டும், கட்டிய மனைவியோடு வாழ வேண்டும், பெற்ற பிள்ளைகளுடன் வாழ வேண்டும். பாசம் அங்கேதான் பிறக்கும்.'' என்று விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சித்துள்ளார்.

அதாவது, விஜய் படங்களில் வீர வசனம் மட்டும்தான் பேசுவார். நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்ட வேண்டும். நாங்கள் எல்லாம் அப்படித்தான் வாழ்கிறோம் என்று குறிப்பிட்டதோடு, 
மக்களை குழப்பி வெற்றி பெற்றுள்ளனர். சனி, ஞாயிறு என்றால் முதல்வர் விடுமுறை எடுத்துக்கொள்வார். திங்கள்கிழமைதான் திரும்ப வருவார். விஜய் முதல்வர் ஆனதும் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், திமுகவாக இருந்தாலும் சரி, தவெகவாக இருந்தாலும் சரி, அங்கு இருப்பவர்கள் அதிமுகவினர்தான். அவர்கள் பெரும்பாலும் இங்கிருந்து சென்றவர்கள்தான். அதிமுகவை நம்பிதான் தவெக கட்சி நடத்த முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். தமிழகத்தை ஆள்வது அதிமுகதான் என்று தவெகவை தாக்கி பேசியுள்ளார்.

அதிமுக கரைந்து விடும் என்கிறார் ஆதவ் அர்ஜுனா. அதிமுக என்ன சர்க்கரையா? என்று கேள்வி எழுப்பியதோடு, உங்கள் தலைவர் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவரா..? அல்லது தமிழகத்துக்கு தனி மாநில அந்தஸ்து வாங்கி கொடுத்தாரா? என்ன சாதனை செய்தார் என்பதை சொல்லுங்கள்? என்றும் விமர்சித்து பேசியுள்ளார்.

அத்துடன், முதல்வர் விஜய் 70 படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், ஒரு தேசிய விருது வாங்க முடியவில்லை. எங்களை அரசியலில் வீழ்த்த வேண்டும் என நினைத்தீர்கள் எனில், நீங்கள்தான் காணாமல் போவீர்கள். வெற்றி பெறும்போது இருமாப்பு கொள்வதும், தோல்வி வரும்போது துவண்டு விடுவதும் அதிமுக அல்ல என்று தாராபுரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami criticizes Chief Minister Vijays personal life in Dharapuram


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->