''தேர்தல் வழக்கு முடியும் வரை தொகுதியை காலியாக வைத்திருப்பது பொது நலனுக்கு எதிரானது''; உயர்நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் தரப்பு வாதம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாகவுள்ள 05 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில், முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ''தேர்தல் வழக்கு முடியும் வரை தொகுதியை காலியாக வைத்திருப்பது பொது நலனுக்கு எதிரானது,'' என வாதிடப்பட்டது.

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய 05 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 05 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து ஜூலை 10-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. குறித்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், ''எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியில் இணைந்துள்ளதால், ஏற்பட்ட காலியிடம் என்பது இடைத்தேர்தல் அறிவிப்பதற்கான தெளிவான காலியிடமாக கருத முடியாது.

தேர்தல் வழக்கு முடியும் வரை 05 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என தேர்தல் ஆணையம், தெரிவித்துள்ளதால் மனுவை ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தேர்தல் வழக்குகள் முடிவடைய அதிக காலம் எடுக்கும் என்ற எதிர்மனுதாரர்களின் வாதங்களை ஏற்க முடியாது.'' என கூறப்பட்டது.

அப்போது, அம்பாசமுத்திரம் தொகுதி வாக்காளர் காந்தி மதிநாதன் தரப்பில், இந்த வழக்குக்கு ஆதரவாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள முதல்வர் விஜய் தரப்பில், வாதிடுகையில், திருச்சி கிழக்கு தொகுதியில் 91 ஆயிரத்து 381 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். அந்தத் தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கும்படி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது.

இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தால் மட்டுமே, இதுபோன்ற கோரிக்கைகளை நீதிமன்றம் வழங்க முடியும்.

மேலும், இந்த வழக்கு பொதுநல வழக்கு அல்ல. தனிநபர் நல வழக்கு. தேர்தல் வழக்கு முடியும் வரை தொகுதியை காலியாக வைத்திருப்பது பொது நலனுக்கு எதிரானது,'' என வாதத்தில் குறிப்பிடப்பட்டது.

முதல்வர் தரப்பு வாதங்கள் முடிவடையாததை அடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Tamil Nadu government argued in the High Court that keeping the constituency vacant is against the public interest


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->