விவசாயிகளில் நிலைமையை காது கொடுத்து கேட்க கூடிய நிலைமையில் அரசோ, அமைச்சர்களோ இல்லை; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் சாடல்..! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழ வீதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசுகையில் கூறியுள்ளதாவது;

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகள் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதிகளாக உள்ளன. இப்பகுதிகளில் போதிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,  அங்குள்ள வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகிவரும், விவசாயிகள் இந்த நிலைமையை எடுத்து கூறினால் கூட, காது கொடுத்து கேட்க கூடிய நிலைமையில் அரசோ, அமைச்சர்களோ இல்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், இவர்களின் நோக்கம் (தவெகவினர்) முழுவதும் எதிர்க்கட்சிகளை குறை சொல்வதை தவிர, மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி அக்கறை எடுத்துக்கொள்வதே இல்லை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், விவசாயிகளின் பிரச்னையிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 30, 40 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை குறைப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். 

மேலும், காலியாக உள்ள 10 துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்ததோடு, தேர்தலுக்குப் பிறகு விஜய்க்கு எங்களுடைய ஆதரவு தேவைப்பட்டது. நாங்கள் அன்று ஆதரிக்கவில்லை என்றால், பிஜேபி ஆதரவுடன் தமிழ்நாட்டில் குடியரசு ஆட்சி வந்திருக்கும் ஆகையால் தான் தவெகவிற்கு ஆதரவு அளித்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த இடைத்தேர்தல் தேவையற்ற ஒன்று. தமிழ்நாட்டு மக்கள் தலையில் திணிக்கப்பட்ட ஒரு தேர்தல் எனவும், அதேபோல் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் எழுவது வேதனை அளிக்கிறதாகவும் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CPIMs Balakrishnan stated that neither the government nor the ministers are in a position to listen to the grievances of the farmers


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->