U19 டெஸ்ட் தொடர் ; ஆஸ்திரேலியாவை அலறவிட்ட இந்திய வீரர்; 17 வயதில் இரட்டை சதம் அடித்து அசத்தல்..!
Indian player Lakshya Raichandani rattled Australia by scoring a double century at the age of 17
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா யு19 அணி, 03 ஒருநாள் போட்டிகள் மற்றும் 02 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 3-0 என அனைத்திலும் வெற்றிபெற்று ஆஸ்டிரேலியாவை தோற்கடித்தது.
02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இரண்டு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ராஜோட்டில் நேற்று தொடங்கியது. ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 217 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா வீரர் பிளேக் கேட்டில் சதமடித்து அசத்தினார்.

இந்நிலையில் இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 08 விக்கெட்டுகளை இழந்து 430 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரரான 17 வயது லக்ஷ்ய ராஜேஷ் ராய்ச்சந்தானி 20 பவுண்டரிகள் 04 சிக்சர்களுடன் 210 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்து வருகிறார். லக்ஷ்ய ராஜேஷ் ராய்ச்சந்தானியின் இந்த அதிரடியானஅபார ஆட்டத்தால், இந்திய அணி 213 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் லக்ஷய ராய்ச்சந்தானி சதமடித்தார். இவர் விராட் கோலி மற்றும் ஜோ ரூட்டை ரோல் மாடலாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Indian player Lakshya Raichandani rattled Australia by scoring a double century at the age of 17