முதியோர் ஓய்வூதியம் பெற வங்கிக் கணக்கோடு ஆதார் இணைப்பு நிபந்தனைக்கு சிபிஐ(எம்) எதிர்ப்பு..! - Seithipunal
Seithipunal


''முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்துவதால் பெரும் அவதிகளுக்கு ஆளாகி இருப்பதாக மூத்த குடிமக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.'' என்று சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

முதியோர் ஓய்வூதியம் பெற வங்கிக் கணக்கோடு ஆதார் இணைப்பு நிபந்தனை! மூத்த குடிமக்கள் பெரும் அவதி!! நிபந்தனையை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை..!!

''முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்துவதால் பெரும் அவதிகளுக்கு ஆளாகி இருப்பதாக மூத்த குடிமக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

ஆதார் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள், பெயர்களில் உள்ள வேறுபாடுகள் உள்ளிட்ட பிரச்சனைகளால் முதியோர் ஓய்வூதியம் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு தடைபட்டிருக்கிறது என்றும், முதியோர் ஓய்வூதியம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படாததால் மூத்த குடிமக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் பெரும் எண்ணிக்கையில் வந்து முறையிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொளுத்தும் வெயில் சுட்டெரிக்கும் வேளையில், இத்தகைய அலைச்சல் உடல்ரீதியாகவும் அவர்களை பாதிக்கக் கூடியது. ஆதார் மையங்களுக்கு, வங்கிகளுக்கு உடன் அழைத்துச் செல்ல உதவி இல்லாதவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

இந்த திடீர் அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு மன உளைச்சலையும், அலைச்சலையும் ஏற்படுத்தி இருப்பதை கருத்தில் கொண்டு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பதை கட்டாயம் ஆக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CPIM opposes the condition linking Aadhaar with bank accounts for receiving old age pensions


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->