இனி வருடத்திற்கு 13 மாதங்கள் மொபைல் ரீசார்ஜ் பண்ண தேவையில்லை; வந்தது மொபைல் ரீசார்ஜ் திட்டங்களில் புதிய மாற்றம்..!
TRAI introduces new changes to mobile recharge plans
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களுடன், 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களையும் கட்டாயமாக வழங்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் புதுப்பித்துக் கொள்ளும் வகையிலான திட்டத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என டிராய் தெரிவித்துள்ளது.
இதுவரை 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களைப் பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள், ஒரு ஆண்டில் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது.
அதாவது, 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 12 முறை மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதன் மூலம், ரீசார்ஜ் செய்வதில் ஏற்படும் கூடுதல் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மொபைல் டேட்டா வசதி தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்காக, குரல் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி (SMS) வசதிகள் மட்டுமே கொண்ட சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக, டேட்டா சேவையைப் பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான அழைப்பு மற்றும் SMS வசதிகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
அதாவது, அடிப்படை மொபைல் போன்களைப் பயன்படுத்துவோர் மற்றும் டேட்டா தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்கு இந்த மாற்றம் பயனுள்ளதாக இருக்க கூடும். புதிய விதிமுறைகள் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கு ஏற்ற ரீசார்ஜ் திட்டங்களைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
TRAI introduces new changes to mobile recharge plans