ஏமன் உள்நாட்டுப் போர்; 4,481 ஆக உயர்ந்துள்ள பலி எண்ணிக்கை; ஒரே வாரத்தில் 1,80,000 பேர் இடப்பெயர்வு..!
180000 people displaced in just one week of the Yemen civil war
ஏமனில் பல ஆண்டுகளுக்கு முன்பே உள்நாட்டுப் போர் தொடங்கியது. ஈரான் ஆதரவு ஹவுதி படைகளுக்கும் ஏமன் அரசு ராணுவத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்நிலையில், அது தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. ஏமனில் ஒரு பகுதியில் இருக்கும் ஹவுதி அமைப்பினர், அந்நாட்டில் உள்ள பிற பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் அதிரடித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில், ஹவுதிகள் ஏமன் கடற்கரையோரமாக முன்னேறி, முக்கிய துறைமுக நகரமான மோக்காவையும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் தீவுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றி, அவர்களுக்கு உலகின் வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதம் வழக்கமாக கடந்து செல்லும் பாப் அல்-மண்டேப் ஜலசந்தியில் உள்ள கப்பல்களைக் கண்காணிக்கும் வகையில் உள்ளது. இதை வைத்தும் அவர்கள் மிரட்டலும் விடுத்து வருகின்றனர். இதனால், சவூதி அரேபியாவின் எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு புறம் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள் எனக் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையில், அதாவது கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் (செப்டம்பர் 19 முதல் 26 வரை) ஏமனில் 164 பேர் உயிரிழந்ததாகவும், 645 பேர் காயமடைந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சமீபத்திய வன்முறையால் 1,80,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏமனில் ஏற்பட்ட சமீபத்திய உயிரிழப்புகளுடன், ஆகஸ்ட் 06 முதல் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 838 மரணங்கள் உட்பட 4,481 ஆக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
English Summary
180000 people displaced in just one week of the Yemen civil war