குறைந்த விலை, சிறப்பு சலுகைகள் என ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி: அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


''தீபாவளியை முன்னிட்டு குறைந்த விலை, சிறப்பு சலுகைகள் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.'' என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

''தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

குறைந்த விலை, சிறப்பு சலுகைகள் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அறிமுகமில்லாத இணையதளங்களில் முன்கூட்டியே பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
 சந்தேகத்திற்கிடமான இணையதளங்கள், அழைப்புகள் மற்றும் இணைப்புகளைத் தவிர்த்து, பாதுகாப்பான முறையில் பொருட்களை வாங்குங்கள். 

சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். பண்டிகைக் கொண்டாட்டங்களை மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாடுவோம்.''என்று குறிப்பிட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Keerthana warns against online firecracker sales scams


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->