பாதுகாப்புப் படை வீரர்களிடையே வாக்குவாதம்; ஆத்திரத்தில் 4 வீரர்களை சுட்டுக்கொன்றுள்ள சக வீரர்..!
A security force soldier shot dead four of his colleagues following an argument
ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை ( சிஐஎஸ்எஃப்) முகாம் ஒன்றில், சக வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உதவி கமாண்டன்ட் மற்றும் சப் - இன்ஸ்பெக்டர் உள்பட 04 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹிமாசலப் பிரதேச எல்லைக்கு அருகே உள்ள மஷ்கா கிராமத்தில் அமைந்துள்ள 'சேவா-III' நீர்மின் திட்ட வளாகத்தில் இன்று காலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தலைமை காவலர் (கான்ஸ்டபிள்) அபிதேஷ் குமார் என்பவர், சக ஊழியர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவர்களைத் துப்பாக்கியால் சுட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் சக ஊழியர்கள் அவரைப் பிடித்து, அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ள நிலையில்,அவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த வீரர்கள் உதவி கமாண்டன்ட் அங்கித் குமார் பாண்டே, சப்-இன்ஸ்பெக்டர் லக்ஷ்மன் சிங் மற்றும் காவலர்கள் ரஃபிக் அகமது, சந்தீப் குமார் என 04 பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சிஐஎஸ்எஃப் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக, தலைமைக் காவலர் அதேவேளையில், காவல்துறையினர் இது தொடர்பாக, அபிதேஷ் குமார் மீது வழக்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A security force soldier shot dead four of his colleagues following an argument