உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 03 ஆக உயர்வு..? குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரை..!
Number of female judges in the Supreme Court set to rise to three
உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மூன்றாக உயரவுள்ளது. குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள சுனிதா அகர்வாலை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் ஆகியோரும் விரைவில் உச்ச நீதிமன்றத்திற்குப் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நீதிபதி சுனிதா அகர்வால்
நீதிபதி சுனிதா அகர்வால் 1990 டிசம்பரில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். 21 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய அணுவும் உள்ள இவர், நவம்பர் 2011-இல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர், ஆகஸ்ட் 2013-இல் நிரந்தர நீதிபதியாகப் பதவியேற்றார். இவர் பயிற்சி பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட மத்தியஸ்தர் ஆவார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மத்தியஸ்தம் மற்றும் சமரசம் குறித்த பயிற்சி பெற்ற முதல் குழுவில் ஒருவராகவும் இவர் இருந்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தற்போது பெண் நீதிபதிகளாக ஆகஸ்ட் 31, 2021 அன்று முதல் பதவியில் உள்ள நீதிபதி பி.வி. நாகரத்னாவுடன், இந்த ஆண்டு ஜூன் 02 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற வெங்கட சுப்ரமணி மோகனா ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில், நீதிபதி சுனிதா அகர்வால் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றவுடன், அவரும் நீதிபதி நாகரத்னாவும் உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட நீதிபதிகளாக இருப்பார்கள்.
அதேப்போன்று, நீதிபதி மோகனா நேரடியாக வழக்கறிஞர் துறையிலிருந்து பதவி உயர்வு பெற்றவர் என்பதோடு, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றியவர். குறிப்பாக நீதிபதி நாகரத்னா வருகிற 2027-ஆம் ஆண்டில் ஒரு மாத காலத்திற்கும் மேல் இந்தியாவின் தலைமை நீதிபதியாகவும் பதவி வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Number of female judges in the Supreme Court set to rise to three